/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2025 05:29 AM

திருப்பூர் : தமிழக எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
மாணவர் அணி செயலாளர் திலகராஜ், தெற்கு நகர செயலாளர் நாகராஜ், மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் முத்துக்கிருஷ்ணன், செந்தில்குமார், பகுதி செயலாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.
l திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், மண்டல தலைவர் கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பி, அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.