/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் விதிமுறைகளை மீறாதீங்க... அரசியல் கட்சியினருக்கு அறிவுரை
/
தேர்தல் விதிமுறைகளை மீறாதீங்க... அரசியல் கட்சியினருக்கு அறிவுரை
தேர்தல் விதிமுறைகளை மீறாதீங்க... அரசியல் கட்சியினருக்கு அறிவுரை
தேர்தல் விதிமுறைகளை மீறாதீங்க... அரசியல் கட்சியினருக்கு அறிவுரை
ADDED : மார் 21, 2024 08:41 AM
உடுமலை:உடுமலையில், தேர்தல் விதி முறைகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், அரசியல் கட்சியினர் தேர்தல் விதமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். உரிய அனுமதி பெற்று, விழா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள், உரிய அனுமதி பெற, தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் செலவுகளையும், தொடர்ந்து தேர்தல் செலவின குழுவினர் ஆய்வு செய்வதால், உரிய விபரங்கள் அளிக்க வேண்டும். தேர்தல் விதி மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவுறுத்தப்பட்டது.