/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிருக்கு நன்மையளிக்கும் சுற்றுச்சூழல் உழவியல் முறை
/
பயிருக்கு நன்மையளிக்கும் சுற்றுச்சூழல் உழவியல் முறை
பயிருக்கு நன்மையளிக்கும் சுற்றுச்சூழல் உழவியல் முறை
பயிருக்கு நன்மையளிக்கும் சுற்றுச்சூழல் உழவியல் முறை
ADDED : ஆக 24, 2024 01:50 AM
உடுமலை:சுற்றுச்சூழல் சார்ந்த உழவியல் முறையில், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பமானது, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இத்தொழில்நுட்பம் வாயிலாக பயிரை இயற்கை முறையில் பாதுகாக்க ஒரு சாதகமான சூழ்நிலையை கட்டமைக்கும்.
இதில், எதிர் உயிர்களாகிய டிரைக்கோடர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இட்டு, பயிரை தாக்கும் நோய் காரணிகளை அழிக்கலாம். பசுந்தாள் பயிர்களை பயிரிட்டு மண்ணில் மடக்கி உழவு செய்வதால், நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு தேவையான அங்கக சத்துகளை அளிக்கலாம்.
ஊடுபயிராக தட்டை, காராமணியை விதைத்து பொறி வண்டு மற்றும் பிற நன்மை செய்யும் இறை விழுங்கிகள் உற்பத்தியை ஊக்குவிக்கலாம்.வரப்புகளில், ஆமணக்கு, செண்டுமல்லி சாகுபடி செய்து, பயிர்களை தாக்க கூடிய பூச்சிகளை கவர்நது இழுத்து அழிக்கலாம்.
பல வகையான ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி தீமை செய்யும் பூச்சிகளை குறைக்கலாம். இத்தகைய முறைகளை பின்பற்றுவதால், ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து, சாகுபடியில் பல நன்மைகளை பெறலாம், என, அங்கக சான்றளிப்பு துறையினர் தெரிவித்தனர்.

