நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி வக்கீல்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சங்க தலைவராக இளவரசு, துணைத் தலைவராக இளங்கோவன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்களாக சுதர்சன், பானு பிரசாத், நந்தினி, நிர்மலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இணை செயலாளர் பதவிக்கு இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது எனவும், மற்றொரு செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பொதுக்குழு மூலம் முடிவு செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் வக்கீல் வித்யா தெரிவித்தார்.

