நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:நேற்றுடன், 2023 - 2024ம் கல்வியாண்டு நிறைவு பெறுகிறது. இன்று (27 ம் தேதி) முதல் மே, 31 வரை பள்ளிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, 24 முதல், மே, 31 வரை பள்ளிகள் விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூனில் வழங்கப்பட்ட பள்ளி வேலை நாட்கள் கால அட்டவணை படி, ஏப்., 24 முதல் நேற்று வரை பள்ளிகள் செயல்படும்; ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டனர்.
கடந்த இரு நாட்களாக துவக்க, நடுநிலைப்பள்ளி செயல்பட்டது. இந்நிலையில், நேற்றுடன் (26ம் தேதி) 2023 - 2024ம் கல்வியாண்டு நிறைவு பெறுகிறது. வரும், 29ம் தேதி முதல் அட்மிஷன் பணி பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருவர்.

