/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை தீவிரம் திடீர் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு
/
சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை தீவிரம் திடீர் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு
சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை தீவிரம் திடீர் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு
சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை தீவிரம் திடீர் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 24, 2025 09:42 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த பீட்ரூட் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை சரிந்ததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை பகுதிகளில் நிலவும் குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, மலைப்பகுதிகளில் விளையும் பீட்ரூட் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், விலை சரிவு, நோய்த்தாக்குதல், வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், சாகுபடி பரப்பு குறைந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு பெய்த பருவ மழை காரணமாக, உடுமலை சுற்றுப்பகுதிகளில் மீண்டும் பீட்ரூட் சாகுபடி அதிகரித்தது.
விதை நடவு செய்த, 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில், அறுவடை சமயத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் வரை, 25 கிலோ கொண்ட ஒரு பை, ரூ.1,500 வரை விற்று வந்த நிலையில், வரத்து அதிகரிப்பு காரணமாக, விலை கடும் சரிவை சந்தித்து, ரூ.250க்கு விற்று வருகிறது.
இதனால், நடப்பு பருவத்தில் பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடிக்கு, விதை, உரம், பூச்சி மருந்து என, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
ஏக்கருக்கு, 20 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில், காய் பிடிக்கும் பருவத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், ஏக்கருக்கு, 10 முதல், 12 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
கடந்த வாரம் வரை, 25 கிலோ பை, ரூ. 1,500 வரை விற்று வந்த நிலையில், வரத்து அதிகரிப்பால், தற்போது, ரூ. 250க்கு விற்கிறது. இதனால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலையில் விளையும் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தை வாய்ப்புகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.