/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்த நீரில் பெருநெல்லி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
/
குறைந்த நீரில் பெருநெல்லி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
குறைந்த நீரில் பெருநெல்லி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
குறைந்த நீரில் பெருநெல்லி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 07, 2025 08:21 PM
உடுமலை:
குறைந்த தண்ணீரிலும் நீண்ட காலத்துக்கு பலன் கொடுக்கும் பெருநெல்லி சாகுபடியை மேற்கொள்ள, உடுமலை வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை சுற்றுவட்டாரத்தில், தண்ணீர் தேவை குறைவான சாகுபடிகளுக்கு விவசாயிகள் மாறத்துவங்கியுள்ளனர். இதில், பெருநெல்லி சாகுபடிக்கும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இச்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு, 200 செடிகள் வரை பெருநெல்லி நடவு செய்யலாம். நடவு செய்யப்படும் கன்றுகள், 4 ஆண்டுகளில், காய்ப்புக்கு வருகிறது.
தொடர்ந்து, 40 ஆண்டுகள் வரை விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜன., - மார்ச் பருவத்தில் அதிகளவு விளைச்சல் கிடைக்கும். பூக்கள் பூக்க ஆரம்பித்த, இரண்டரை மாதத்தில் காய்கள் நன்கு முற்றி அறுவடை செய்யப்படுகிறது.
அதேபோன்று, அடுத்த ஆறு மாத்தில் அடுத்த அறுவடைக்கு தயாராகிறது. வறட்சியை தாங்கி வளரக்கூடியது என்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுகிறோம். ஏக்கருக்கு ஆண்டுக்கு, 8 முதல், 10 டன் வரைக்கும் விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
'போதிய மழையில்லாமல், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வறட்சியை தாங்கி வளரும் நெல்லிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம்.
தோட்ட பராமரிப்பை விவசாயிகள் முறையாக கடைபிடித்தால், இரண்டு பருவத்திலும் சேர்த்து ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம், 40 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும்,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.