/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 02, 2024 02:24 AM

உடுமலை;நீர் சிக்கனம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய சொட்டு நீர் பாசன முறைக்கு, அரசு அறிவித்துள்ள மானியத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில்,பற்றாக்குறை மற்றும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறசொட்டுநீர் பாசன முறையை பின்பற்ற விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி அறிக்கை: சொட்டு நீர் பாசன முறையில், 60 முதல் 80 சதவீதம் வரை நீர்பயன்பாட்டுதிறன் அதிகரிப்பதால், குறைவான நீரில் அதிக நிலப்பரப்பிற்கு பாசனம் செய்ய முடிகிறது.
பயிரின் விளைச்சலும், 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. விவசாயிகளிடம் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் 'ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ்', திட்டம், தோட்டக்கலைதுறை சார்பில் செயல்படுத்துகிறது.
சொட்டுநீர்பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு, இத்திட்டத்தில் மானியமும் வழங்கப்படுகிறது. பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ற வகையில், மானியத்தொகை வழங்கப்படுகிறது.
அதிக பட்சமாக 4 அடி இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புக்கு, பெரிய விவசாயிக்கு ஒரு ெஹக்டேருக்கு, ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாயும், சிறு குறு விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 மானியமும் வழங்கப்படுகிறது.
அரசு மானியத்தில், ஏற்கனவே சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தியுள்ள விவசாயிகள், ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். பாசனத்தின் பக்கவாட்டு குழாய்கள் பழுதடைந்திருந்தாலும் அதை மாற்றுவதற்கு மானியம் பெறலாம்.
நடப்பு நிதியாண்டு 2024 - 25க்கு உடுமலை வட்டாரத்தில், 480 ெஹக்டேரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, 310 லட்ச ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை உள்வட்ட கிராம விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சிங்காரவேல் 9524727052 என்ற மொபைல்போன் எண்ணிலும், குறிச்சிக்கோட்டை, பெரியவாளவாடி உள்வட்டத்துக்குட்பட்ட கிராம விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சித்தேஷ்வரன் 8883610449 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் https://tnhorticulture.tn.gov.in என்ற இணைப்பில் பதிவு செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.