/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் போராட்டம் சார் -- பதிவாளர் இடமாற்றம்
/
விவசாயிகள் போராட்டம் சார் -- பதிவாளர் இடமாற்றம்
ADDED : ஆக 21, 2024 01:12 AM
உடுமலை:திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கணியூர் சார் - - பதிவாளர் தாமோதரன், முறைகேடு, போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்து, விவசாயநிலங்கள், அரசு நிலங்கள், கோவில் நிலங்களை ஆவண பதிவு செய்தும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக கூறி, விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
நேற்று முன்தினம், சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, 140 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தாமோதரனை, நாகப்பட்டினம் சார் - பதிவாளராக இட மாறுதல் செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலர் வீரப்பன் கூறுகையில், ''தாமோதரன் இடம் மாற்றம் செய்யப்பட்டாலும், அவரது பணிக்காலத்தில், பதிவு செய்த ஆவணங்கள் குறித்து, உயர் அதிகாரிகள் முழு ஆய்வு செய்ய வேண்டும்.
''ஆய்வு அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

