திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களை பணி அமர்த்தும் வகையில், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியின் பயிற்சி மையம், ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகிறது.
ஆடை உற்பத்தி துறையை நோக்கி புதியவர்களை ஈர்க்கும் வகையில், இலவச தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. ஒரு பிரிவுக்கு, 25 பேர் வீதம், இரண்டு நாட்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதந்தோறும் மூன்றாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. கடந்த மாத இறுதியில், பேட்டர்ன் மேக்கிங் பயிற்சிகள் துவங்கின.
இதன் தொடர்ச்சியாக, வரும், 18ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சிகளும்; இரண்டாம் கட்ட பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகளும் துவங்க உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு, 95979 14182 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.