/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் 'வனம்' அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது
/
பல்லடம் 'வனம்' அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது
பல்லடம் 'வனம்' அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது
பல்லடம் 'வனம்' அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது
ADDED : ஆக 25, 2024 12:31 AM

பல்லடம்;பசுமை பணியை ஊக்கப்படுத்தும் வகையில், பல்லடம் 'வனம்'அமைப்புக்கு 'பசுமை முதன்மையாளர்' விருது வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமையை ஏற்படுத்துதல், மழை நீரை வளமாக்கி நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல், கழிவுகளை வளமாக்குதல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் ஆகிய ஐந்து கோட்பாடுகளை பின்பற்றி, பல்லடம் 'வனம்' அமைப்பு செயல்படுகிறது.
இதன் தலைவராக சுவாதி கண்ணன், செயலாளராக சுந்தரராஜ், பொருளாளராக விஸ்வநாதன் மற்றும் 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனத்தலைவர் நாகராஜன், 'தி சென்னை சில்க்ஸ்' ஆறுமுகம் உட்பட தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர், அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்பின் பசுமை பணிகளை பாராட்டி, மாவட்ட நிர்வாகம், சுதந்திர தினத்தன்று, 'பசுமை முதன்மையாளர்' விருதினை, வனம் அமைப்புக்கு வழங்கியுள்ளது
இந்த அமைப்பின் துணை இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு உட்பட, ஏராளமான விருதுகள் வனம் அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது. 2015 -- 2024 வரை, 8 லட்சம் மரக்கன்று, 12.50 லட்சம் பனை விதைகள், 10 ஆயிரம் பனை நாற்றுகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். இப்பணியை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம், 'பசுமை முதன்மையாளர்' விருது வழங்கி கவுரவித்துள்ளது. இது வனம் அமைப்பின் பணிகளை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
--- மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 'பசுமை முதன்மையாளர்' விருதுடன் 'வனம்' அமைப்பு நிர்வாகிகள்.

