/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவித்தொகை குறித்த அறிவிப்பு :கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்
/
உதவித்தொகை குறித்த அறிவிப்பு :கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்
உதவித்தொகை குறித்த அறிவிப்பு :கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்
உதவித்தொகை குறித்த அறிவிப்பு :கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்
ADDED : ஜூலை 08, 2024 08:43 PM
பல்லடம்;தமிழக அரசு அறிவித்த உதவித்தொகை குறித்த சட்டசபை அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என, கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மண்டல கைத்தறி நெசவாளர் (பாரதீய மஸ்தூர்) சங்கத்தின் செயலாளர் நடராஜ் கூறியதாவது:
கைத்தறி நெசவாளர் இயற்கை மரணமடைந்தால், ஈமச்சடங்குக்காக, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணை உள்ளது. இது, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கைத்தறி துணி நூல் துறை இணையதளத்தில் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும் என உள்ளது.
எனவே, தமிழக அரசு அறிவித்த ஈமச்சடங்கு உதவித்தொகை நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கா அல்லது கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.