/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர் மட்ட பாலம் கட்டுமான பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
/
உயர் மட்ட பாலம் கட்டுமான பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
உயர் மட்ட பாலம் கட்டுமான பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
உயர் மட்ட பாலம் கட்டுமான பணி; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 01, 2024 12:53 AM

உடுமலை : உடுமலை அருகே முக்கோணத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கணபதிபாளையம், வெனசப்பட்டி வழியாக கொங்கல்நகரம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த ரோட்டில், கணபதிபாளையம் அருகே மழை நீர் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் இருந்தது. மழைக்காலத்தில், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக மேம்படுத்த, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாலம் பணிகள் நிறைவு பெற்று ஓடுதளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
இப்பணிகளை நேற்றுமுன்தினம், நெடுஞ்சாலைத்துறை தாராபுரம் கோட்ட பொறியாளர் ராணி, பாலம் கட்டுமான பணிகளின் தரம் மற்றும் ஓடுதளம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தார்.
உடுமலை உதவி கோட்ட பொறியாளர் ராம்வேல், உதவி பொறியாளர் லோகேஷ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.