/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேரளா வந்து உன்னை மிதிப்பேன்' ரயிலில் போதை வாலிபர்கள் ரகளை
/
'கேரளா வந்து உன்னை மிதிப்பேன்' ரயிலில் போதை வாலிபர்கள் ரகளை
'கேரளா வந்து உன்னை மிதிப்பேன்' ரயிலில் போதை வாலிபர்கள் ரகளை
'கேரளா வந்து உன்னை மிதிப்பேன்' ரயிலில் போதை வாலிபர்கள் ரகளை
ADDED : மே 27, 2024 12:43 AM

திருப்பூர்: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம், ஆலப்புழா நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு - திருப்பூர் இடையே வந்து கொண்டிருந்தது. முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர்கள் சிலர், பெண் உட்பட ஒரு குடும்பத்தினரிடம் போதையில் தகராறில் ஈடுபட்டனர். இந்த வீடியோ நேற்று பரவியது.
இளைஞர் ஒருவர், 'இதுஎன்னோட ஸ்டேஷன்; என் திருப்பூர். உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. முடிந்தால் போலீசை வந்து என்னை பிடிக்க சொல்லு' என்கிறார்; மற்றொருவர், 'என்னோட ஊரில் நான் மட்டும் பேசுவேன்; யாரும் பேசக்கூடாது; கம்முன்னு தான் இருக்கணும்' என்கிறார்.
பயணி ஒருவர், 'உங்க ஊரு வந்துருச்சு; இறங்குங்க' எனக்கூற, முதலில் பேசிய இளைஞர், 'கேரளாவில் வந்து உன்னை, உன் குடும்பத்தை மிதிப்பேன்' என, மிரட்டுகிறார்.
பிளாட்பார்மில் இறங்கிய இளைஞர்கள், மீண்டும் பயணியிடம் வாக்குவாதம் செய்ய, பயணி - இளைஞர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவுபெட்டியில் இருந்த பயணியர், போலீசை உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை. இளைஞர்கள் ரயிலை விட்டு இறங்கிச் சென்றனர்.
ரயில் புறப்படும் முன், மீண்டும் ரயில் பெட்டியில் ஏறிய வாலிபர், 'அம்மா, மனைவி குடும்பத்தில் யாரையும் இருக்க விட மாட்டேன்; பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன்' என, மிரட்டுகிறார்.
போத்தனுார் ரயில்வே டி.எஸ்.பி., யாஸ்மினிடம் கேட்டபோது, 'போத்தனுார் ஸ்டேஷனில் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்; விசாரணை நடக்கிறது' என்றார்.
இதற்கிடையே, திருப்பூர், பவானி நகரைச் சேர்ந்த அசோக், 20, மற்றும் 17 வயது சிறுவன், ரயில் பயணியிடம் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

