/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்தில் சென்றால் கபாலம் கலங்கும் பாதையில் நடந்தால் பற்கள் கழலும்
/
பாலத்தில் சென்றால் கபாலம் கலங்கும் பாதையில் நடந்தால் பற்கள் கழலும்
பாலத்தில் சென்றால் கபாலம் கலங்கும் பாதையில் நடந்தால் பற்கள் கழலும்
பாலத்தில் சென்றால் கபாலம் கலங்கும் பாதையில் நடந்தால் பற்கள் கழலும்
ADDED : செப் 02, 2024 12:35 AM

கால்வாய் அடைப்பு
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் எதிர் வீதியில் சாக்கடைக் கால்வாய் சுத்தம் செய்வதில்லை. ஓட்டல், மீதமாகும் உணவு கழிவுகளைக் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
- முரளி, தாராபுரம் ரோடு.
கடிக்கும் நாய்கள்
திருப்பூர், சந்திராபுரம் சங்கர் நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயப்படுகின்றனர்.
- சிவசக்தி, சந்திராபுரம்.
குடிநீர் தாமதம்
திருப்பூர், பி.என்., ரோடு, சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் பின்புறம் குடியிருப்பு பகுதிக்கு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
- வெற்றிவேல், பி.என்., ரோடு.
பயணிகளுக்கு ஆபத்து
திருப்பூரில் இருந்து சேவூர் செல்லும் அரசு பஸ் (எண்: 9 இ) கியர்பாக்ஸ் அருகே உடைந்து காணப்படுகிறது. பயணிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
- மஞ்சு, சேவூர். (படம் உண்டு)
விபத்து அபாயம்
வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு கம்பி பெயர்ந்து, வாகன ஓட்டிகள் டயர்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன், சீரமைக்க வேண்டும்.
- சண்முகசுந்தரம், வஞ்சிபாளையம். (படம் உண்டு)
நடைபாதையில் குழி
திருப்பூர், ரயில்வே மேம்பாலம் அருகே, குமரன் காம்பளக்ஸில் பாதசாரிகள் விழுந்து விடும் அளவுக்கு நடைபாதையில் குழி உள்ளது. குழியை மூட வேண்டும்.
- குணசேகரன், குமரன் ரோடு. (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
திருப்பூர், பாண்டியன் நகர், விநாயகர் கோவில் வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- மணிமேகலை, பாண்டியன் நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
பெருமாநல்லுார் ஊராட்சி, வாரச்சந்தை முன் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- குட்டிகுமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)
சுகாதாரச் சீர்கேடு
கொடுவாய், கனரா வங்கி சாலை - சந்தை சந்திப்பு சாலையில், குப்பை கழிவுகள் கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை அள்ள வேண்டும். குப்பை கொட்ட, தொட்டி வைக்க வேண்டும்.
- யசோதா, கொடுவாய். (படம் உண்டு)
இறைச்சிக்கழிவு
திருப்பூர், பொங்குபாளையம் - அய்யம்பாளையம் வழியில் குப்பைகளுடன் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, குப்பை அள்ள வேண்டும்.
- நாகராஜ், பொங்குபாளையம். (படம் உண்டு)
நடுரோட்டில் மின் கம்பம்
திருப்பூர், சாமுண்டிபுரத்தில் குடியிருப்பு பகுதி நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும். வாகனங்கள் சென்று வர மின்கம்பம் இடையூறாக உள்ளது.
- முருகேஷ், சாமுண்டிபுரம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
உடைப்பு சரியானது
திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனி ரிங்ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்திருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், சரிசெய்யப்பட்டது.
- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)
விளக்கு ஒளிர்கிறது
திருப்பூர், பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு எரிகிறது.
- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)