ADDED : ஆக 19, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி பகுதியில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திருமுருகன் பூண்டி, சேவூர், பெருமாநல்லுார், தெக்கலுார், அவிநாசி கைகாட்டிப்புதுார், சூளை, பழங்கரை, ஆட்டையாம்பாளையம், காசிக்கவுண்டன்புதுார், அணைப்புதுார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
பழங்கரை ஊராட்சியில் பச்சாம்பாளையம் பகுதியில் 50 ஆண்டு பழமையான மரம் வேருடன் சாய்ந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
அவிநாசி சூளை பகுதியில் முறையான வடிகால் சாக்கடை கால்வாய் இல்லாததால் அவிநாசி - சேவூர் ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான கருக்கங்காடு தோட்டத்தில்,மின்னல் தாக்கி ஐந்து தென்னை மரங்கள் தீப்பிடித்து கருகியது.

