/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செண்டு மல்லி சாகுபடிக்கு ஆர்வமா? இதையெல்லாம் கவனியுங்க
/
செண்டு மல்லி சாகுபடிக்கு ஆர்வமா? இதையெல்லாம் கவனியுங்க
செண்டு மல்லி சாகுபடிக்கு ஆர்வமா? இதையெல்லாம் கவனியுங்க
செண்டு மல்லி சாகுபடிக்கு ஆர்வமா? இதையெல்லாம் கவனியுங்க
ADDED : ஏப் 07, 2024 09:08 PM
உடுமலை;செண்டு மல்லி சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதில், நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லா வகை மண்களிலும் பயிரிடலாம். கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். களர் மற்றும் உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல.
செண்டுமல்லிக்கு சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இப்பயிரை ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிர் செய்யலாம்.
நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின் போது ெஹக்டேருக்கு, 25 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்னர், 15 செ.மீ., இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
ெஹக்டேருக்கு, 1.5 கிலோ விதைகளை பயன்படுத்தலாம். ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் ஜூன், ஜூலை மாதங்கள் நடவு செய்ய மிகவும் ஏற்றது.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கிவிடவேண்டும். விதைகளை, 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தியாக செய்த பிறகு, 15 செ.மீ., இடைவெளியில் விதைகளை வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடன்நீர்ப் பாய்ச்சவேண்டும்.
விதைகள், 7 நாட்கள் முளைத்து விடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களைப் பிடுங்கி நடவு செய்யவேண்டும். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

