/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு இன்னும் வராத இணைய வசதி; அதிருப்தியில் பெற்றோர்
/
பள்ளிகளுக்கு இன்னும் வராத இணைய வசதி; அதிருப்தியில் பெற்றோர்
பள்ளிகளுக்கு இன்னும் வராத இணைய வசதி; அதிருப்தியில் பெற்றோர்
பள்ளிகளுக்கு இன்னும் வராத இணைய வசதி; அதிருப்தியில் பெற்றோர்
ADDED : ஆக 07, 2024 10:53 PM
உடுமலை : உடுமலை அரசுப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான இணைய சேவை பெறுவதில், தாமதம் ஏற்படுவதால் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிமுறைகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு கட்டமாக, ஸ்மார்ட் வகுப்பறைக்கான பணிகளும் பள்ளிகளில் நடக்கிறது.
உடுமலை வட்டாரத்திலுள்ள, 112 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்து இணைய சேவை பெறுவதற்கு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இணைய வசதி உள்ள பள்ளிகளில், தற்போது ஸ்மார்ட் வகுப்பறைக்கான தளவாட பொருட்கள் தயாராக வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னும், 50 சதவீத பள்ளிகளில் பி.எஸ்.என்.எல்., இணைய சேவை பெறுவதில் சிக்கல் தொடர்கிறது. குறிப்பாக, கிராமப்பகுதி மற்றும் கடைக்கோடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தான், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பள்ளிகளில் அடுத்தகட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல், அரைகுறையான நிலைதான் உள்ளது.
பலமுறை முயற்சித்தும், இணையசேவை பெற முடியாமல் இருப்பதால், பள்ளி நிர்வாகத்தினரும் அதிருப்தியில் உள்ளனர். அங்குள்ள குழந்தைகளின் பெற்றோரும், பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை குறித்து விசாரிக்கின்றனர்.
இதனால் பெற்றோருக்கும், கிராமப்பகுதி பள்ளிகளின் மீதான நம்பிக்கை குறையும் சூழல் உருவாகியுள்ளது.