நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை இலக்கிய களத்தின் 16 வது இலக்கிய நிகழ்ச்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இலக்கிய களத்தின் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். சுப்பிரமணியா கலை, அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ரேவதி, 'சுட்டு விரல்' என்ற நுால் குறித்து பேசினார்.
சிறுகதை எழுத்தாளர் பூங்கொடி எழுதிய 'இருவாச்சிசாமி' நுால் அறிமுகம் செய்யப்பட்டது. ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் பவித்ரா, 'இமயத்தின் பெத்தவன்' குறுநாவலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் மோகனா, எழுத்தாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கவிஞர் இளையவன்சிவா நன்றி தெரிவித்தார்.

