/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி நிர்வாகம் ரகசிய திட்டம்? முகமூடி அணிந்து மனு அளித்த மக்கள்
/
நகராட்சி நிர்வாகம் ரகசிய திட்டம்? முகமூடி அணிந்து மனு அளித்த மக்கள்
நகராட்சி நிர்வாகம் ரகசிய திட்டம்? முகமூடி அணிந்து மனு அளித்த மக்கள்
நகராட்சி நிர்வாகம் ரகசிய திட்டம்? முகமூடி அணிந்து மனு அளித்த மக்கள்
ADDED : மார் 11, 2025 04:15 AM

திருப்பூர் : பல்லடம் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக பணிகளை மேற்கொள்வதை சுட்டிக்காட்டும் வகையில், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் கூட்டமைப்பினர், தலையில் கருப்பு முகமூடி அணிந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, அண்ணாதுரை கூறியதாவது:
பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக, நகர பகுதியில் உள்ள ஓடைகளில், மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. ஓடைகளில் குப்பைகளையும், சாக்கடை நீரையும் கலந்துவிட்டு, கழிவுநீரை சுத்திகரிக்க, 13.97 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
வடுகபாளையம் புதுாரில் சுத்திகரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனால், மக்கள் வரிப்பணம் விரயமாவதோடு, முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. சில லட்சம் ரூபாய் செலவு செய்யும் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மக்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே ரகசியமாக பணிகளை துவக்கியுள்ளனர்.
முகமூடி அணிந்து திருடுபவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியாதோ அதேபோல், பல்லடம் நகராட்சி என்ன திட்டம் போடுகிறது என்பதையும் யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. பெரும்பாலான கூட்டங்கள் ரகசியமாகவே நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் திட்டங்களை, கலெக்டர் ஆய்வு செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.