/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய கைப்பந்து போட்டி காரத்தொழுவு பள்ளி வெற்றி
/
குறுமைய கைப்பந்து போட்டி காரத்தொழுவு பள்ளி வெற்றி
ADDED : ஆக 13, 2024 01:34 AM

உடுமலை;உடுமலையில் நடந்த மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
உடுமலையில், பள்ளி மாணவர்களுக்கான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது. உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் போட்டிகளை நடத்துகிறது.
எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. போட்டி ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நடந்தது.
ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் 8 அணிகளும், சூப்பர் சீனியர் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன. அதிக புள்ளிகள் பெறும் அணிகள் குறுமைய அளவில் வெற்றி பெற்றன.
அதன் அடிப்படையில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் சீனியர் பிரிவில் பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.
ஜூனியர் பிரிவில், என்.வி., பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். சீனியர் பிரிவில், கொடிங்கியம் ஆர்.கே.ஆர்., ஞானோதயா பள்ளியும், சூப்பர் சீனியர் பிரிவில் சீனிவாசா மெட்ரிக் பள்ளி அணியும்இரண்டாமிடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.