/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலில் கிருத்திகை விழா திருமுறை இசை நிகழ்ச்சி
/
கோவிலில் கிருத்திகை விழா திருமுறை இசை நிகழ்ச்சி
ADDED : மே 31, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வரும், 5ம் தேதி கிருத்திகை விழா நடக்கிறது.
உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், வைகாசி மாத கிருத்திகை விழா 799 நிகழ்ச்சியாக வரும் 5ம் தேதி நடக்கிறது. பிரசன்ன விநாயகர் கோவிலில், அன்று மாலை, 7:00 மணிக்கு திருமுறை இசை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியினை தொண்டர் சீர் பரவுவார் குருகுல இணைவாணிகள் மற்றும் இசைவாணர்கள் நிகழ்த்துகின்றனர். இதில், திரளான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகை விழா மன்றம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

