/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு
/
குறுமைய போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 20, 2024 10:19 PM
உடுமலை : உடுமலை குறுமைய அளவில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. இதில் உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கான போட்டிகளில் கோ-கோ வில் ஜூனியர் மற்றும் சூப்பர் - சீனியர் போட்டியில் முதலிடமும், சீனியர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.
இறகு பந்தாட்ட போட்டி சூப்பர் சீனியர் பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் போட்டியில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர்.
கபடி சூப்பர் - சீனியர் ஆட்டத்தில் இரண்டாமிடமும், வளையபந்து ஜூனியர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.
மாணவியருக்கான போட்டிகளில் கோ - கோ வில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் இரண்டாமிடம், வளையபந்து சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளனர். போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் அனைவரும், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்புசாமி, பாலுசாமி, வான்மதி, வசந்த்குமார் உள்ளிட்டோருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.