/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் இன்று கும்பாபிேஷகம்
/
கோவில்களில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : மார் 24, 2024 08:26 PM
உடுமலை;பெரியவாளவாடியில், விநாயகர், உச்சிமாகாளியம்மன், மாரியம்மன், பாலசுப்பிரமணியர், முனி முத்தலாம்மன் மற்றும் ரேணுகாதேவி கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
இக்கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிேஷக விழா, கடந்த, 22ல், துவங்கி, மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை, 6:00 மணிக்கு மேல், நான்காம் கால வேள்வி நடக்கிறது. காலை, 9:29 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கோவில்கள் கும்பாபி ேஷகம் நடக்கிறது.
காலை, 11:30 மணிக்கு மேல், அலங்காரபூஜை, தசதரிசனம், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதில், பெரியவாளவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

