/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்வ ராஜகணபதி கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்
/
செல்வ ராஜகணபதி கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஆக 19, 2024 12:13 AM
திருப்பூர்:திருப்பூர், சோளிபாளையம் ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம், வரும் 22ம் தேதி நடக்கிறது.
இக்கோவில், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, பாலகணபதி, பாலமுருகன், நவக்கிரஹம், குப்பாத்தாளம்மன், கன்னிமார், அரசமரத்து விநாயகர் சன்னதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிேஷக விழா, நாளை (20ம் தேதி) துவங்குகிறது. சர்வசித்தி விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி, மாலை, 6:30 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது.
வரும் 21ல் இரண்டாம் கால யாகபூஜை, உபசார வழிபாடு, சதுர்வேத பாராயணம்; மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. வரும், 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாகபூஜைகள் துவங்குகிறது. நிறைவேள்வி பூஜைகளை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுகின்றன.
காலை, 8:10 மணி முதல் 8:40 மணிக்குள், மூலவர் விமான கலசம் கும்பாபிேஷகமும், செல்வ ராஜகணபதி மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகமும் நடக்கிறது. சர்வசாதக முன்னேற்பாடுகளை, கருங்கல்பாளையம் சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையிலான, சிவானந்த சிவம், சுரேந்திர சிவம் குழுவினர் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், சோளிபாளையம் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.