/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைவனாகும் பண்பு; தரணியாளும் தெம்பு
/
தலைவனாகும் பண்பு; தரணியாளும் தெம்பு
ADDED : ஆக 23, 2024 10:34 PM

திருப்பூர்:''ஆளுமைப்பண்பையும், தலைமைத்துவத்தையும் மாணவியர் பெறுவதற்கு, கல்லுாரி பேரவை உதவும்; உள்ளாட்சிகள் உள்ளிட்டவற்றில், 50 சதவீத இட ஒதுக்கீடு, மகளிருக்கு அமலாகியுள்ளது. எதிர்காலத்தை நாட்டை வழிநடத்துவதில், மகளிரின் பங்களிப்பே அதிகமாக இருக்கும். அதற்காக மாணவியராகிய நாங்கள் தற்போதே தயாராகிறோம்''
திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழாவில் பங்கேற்ற மாணவியர் கூறிய வார்த்தைகள் இவை. நேற்று நடந்த விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். கல்லுாரி பேரவையை எம்.எல்.ஏ., செல்வராஜூம், கல்லுாரி மன்றங்களை மேயர் தினேஷ்குமாரும் துவக்கிவைத்தனர். கோவை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் எழிலி பேசினார். கல்லுாரி பேரவை தலைவராக பாஹிதா, துணை தலைவராக ஜெசிதா பேபி, செயலாளராக பிருந்தா, பொருளாளர்களாக யோகேஸ்வரி, உஷா அபிநயா, விளையாட்டு செயலராக முத்துமணி, கலைப்பிரிவு செயலராக கிருத்திகா மற்றும் 17 துறை செயலர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
---
திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி பேரவை துவக்க விழாவில் பங்கேற்ற மாணவியர்.