/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுத்தறிவு தின விழிப்புணர்வு; பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு
/
எழுத்தறிவு தின விழிப்புணர்வு; பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு
எழுத்தறிவு தின விழிப்புணர்வு; பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு
எழுத்தறிவு தின விழிப்புணர்வு; பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 06, 2024 02:39 AM

உடுமலை;உடுமலை வட்டார அரசு பள்ளிகளில், எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவங்கியது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கும் மேற்பட்ட கற்றல் அறிவு இல்லாதவர்களுக்கு, அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தை நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கான நோக்கத்துடன், செப்., 8 ம் தேதி வரும் எழுத்தறிவு தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கு பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் உள்ள கற்போருக்கு, விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவதற்கும், பேரணி, மரம் நடுதல், கலைநிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்துவதற்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
உடுமலை வட்டாரத்தில் மொத்தமாக, 107 மையங்களில், 1,516 கற்போர் இத்திட்டத்தின் கீழ் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது.
மையங்களில் கற்போருக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கியது. மரக்கன்று நடுதல், எழுத்தறிவு பெறுவதற்கான உறுதிமொழி ஏற்பு, சிறப்பு கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.