/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை
/
கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மே 10, 2024 01:46 AM

உடுமலை;மடத்துக்குளம் பகுதியில், வேளாண் கல்லுாரி மாணவியர் களப்பயிற்சியில், கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கழுகரையிலுள்ள கால்நடை மருந்தகத்தில் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
மருத்துவமனை டாக்டர் கிருத்திகா, கால்நடைத்துறை செயல்பாடுகள் குறித்தும், தடுப்பூசி அட்டவணை மற்றும் செயற்கை கருவூட்டல் சேவைகள் குறித்து விளக்கினார்.
மேலும், கால்நடைகளின் மரணம் விவசாயிக்கு பொருளாதார இழப்பாகும், இத்தகைய இழப்புகளை சமாளிக்க, இத்துறை வாயிலாக கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.
இதில், 25 சதவீதம் மட்டுமே பயனாளியால் செலுத்தப்படும். அதே சமயம், 75 சதவீதம் அரசால் வழங்கப்படுகிறது. கால்நடைகள், எருமைகள், செம்மறி ஆடுகள், ஆடு மற்றும் பன்றிகளுக்கு, 100 சதவீதம் தடுப்பூசி போடுவதன் வாயிலாக, கால் மற்றும் வாய் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார். இம்முகாமில், வேளாண் கல்லுாரி மாணவியர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.