/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி
/
பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி
பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி
பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி
ADDED : பிப் 24, 2025 12:53 AM

திருப்பூர்; பிணையம் இல்லா கடன் உதவி திட்டத்தால், திருப்பூரில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர பின்னலாடை தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பரக் கடன் உத்தரவாத திட்டம், திருப்பூருக்குப் பொருளாதார ஊக்குவிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில்கள், பிணையம் இல்லாமல், இயந்திரங்களை வாங்கவும், உபகரணங்களை வாங்கவும், வங்கிகளில் கடன் பெறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் மூலம், பிணையம் இல்லாமல், 100 கோடி ரூபாய் வரை வங்கிக்கடன் பெறலாம்.
தேசியக் கடன் உத்தரவாத நிறுவனம், 100 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 60 சதவீத காப்பீட்டு உத்தரவாதத்தை வழங்க உள்ளது. மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின், 'உதயம்' தளத்தில் பதிவு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிணையம் இல்லாத கடன் பெறும் தகுதியை பெறுகின்றன.
முன்னதாக, வங்கி கடன் மற்றும் வேறு வகை கடன்களில், கடன்களை செலுத்தாத கடனாளியாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பீட்டில், இயந்திரம் மற்றும் உபகரணங்கள் முதலீடு, குறைந்தது, 75 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.
திருப்பூரில் உள்ள, 'நிட்டிங்', சாய ஆலைகள், எம்ப்ராய்டரிங், பிரின்டிங், பின்னலாடை உற்பத்தி என, அனைத்து வகை நிறுவனங்களும், புதிய அறிவிப்பால் பயன்பெறலாம். ''போதிய நிதியாதாரம் இல்லாமல் பரிதவிக்கும் நிறுவனங்க ளுக்கு, பிணையமில்லாத கடன் உதவி என்பது, தொழிலில் வளர்ச்சி பெற மிகுந்த உதவியாக இருக்கும்'' என்கின்றனர் நிறு வன உரிமையாளர்கள்.

