/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் தேர்த்திருவிழா திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி
/
மாரியம்மன் தேர்த்திருவிழா திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி
மாரியம்மன் தேர்த்திருவிழா திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி
மாரியம்மன் தேர்த்திருவிழா திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 18, 2024 04:55 AM

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்களின் 'ஓம் சக்தி' கோஷம் முழங்க திருக்கம்பம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, கோவில் கிணற்றில், திருக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பக்தர்களின் 'ஓம் சக்தி' கோஷம் முழங்க, அம்மனுக்கு முன் திருக்கம்பம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள், மஞ்சள், வேப்பிலை நீர் கொண்டு, திருக்கம்பத்திற்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.
நாளை (19ல்), பூவோடு எடுத்தல், 24ல், மாவிளக்கு ஊர்வலம், மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் வரும், 25ம் தேதி மாலை நடக்கிறது.

