/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் மேற்படிப்புக்கு மேயர் ரூ.5 லட்சம் உதவி
/
மாணவர் மேற்படிப்புக்கு மேயர் ரூ.5 லட்சம் உதவி
ADDED : ஆக 25, 2024 12:47 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், குடும்ப சூழலால், தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக தொடர்ந்து, இது போன்ற மாணவர்கள் குறித்து ஆய்வு நடத்தி, உரிய அறிவுரைகள் வழங்கியும், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆலோசனை கூட்டங்களும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது.
படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் பெரும்பாலும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், இந்நிலை ஏற்படுவது இந்த கூட்டங்களின் வாயிலாகத் தெரிய வந்தது. இதனால், மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 95 சதவீதம் மாணவர்கள் தங்கள் மேற்படிப்பைத் தொடரும் வகையில், மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக மேயர் தினேஷ்குமார், தனது சொந்த பணத்திலிருந்து, 5 லட்சம் ரூபாய் நிதியை கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார். எளிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு இந்த நிதி மூலம் கல்விக் கட்டணம் நேரடியாக கல்லுாரிக்கு செலுத்தப்படும்.
---
எளிய மாணவர்களின் கல்லுாரி கட்டணத்துக்காக, கலெக்டர் கிறிஸ்துராஜிடம், ரூ.5 லட்சத்தை மேயர் தினேஷ்குமார் வழங்கினார். அருகில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்.