/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவருக்கு தியானப்பயிற்சி 'ஹார்ட்புல்னெஸ்' திட்டம்
/
மாணவருக்கு தியானப்பயிற்சி 'ஹார்ட்புல்னெஸ்' திட்டம்
மாணவருக்கு தியானப்பயிற்சி 'ஹார்ட்புல்னெஸ்' திட்டம்
மாணவருக்கு தியானப்பயிற்சி 'ஹார்ட்புல்னெஸ்' திட்டம்
ADDED : ஜூன் 30, 2024 09:00 PM

ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பயிற்சியாளர்களுக்கு திருப்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. இதில், அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் தியானப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தியானப் பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி இம்முகாமில் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் துவங்கிய இம்முகாம் நேற்று இரண்டாவது நாளில் நிறைவடைந்தது.இரண்டாம் நாளான நேற்று, பொதுமக்களுக்கு எளிமையான முறையில் யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை கற்றுத்தரும் செயல் விளக்கப் பயிற்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டுத்தியானம் நடைபெற்றது.
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை பெருநகர மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கட் லஷ்மிநாராயணன், பாண்டிச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்தானந்தம், மூத்த பயிற்சியாளர் சோமக்குமார் உட்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். திருப்பூர் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் சோமக்குமார் தியானப் பயிற்சியின் போது கையாள வேண்டிய நுட்பங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், குறு, சிறு நிறுவன உரிமையாளர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிகள் அளிப்பது; துறை சார்ந்த நிபுணர்கள் மூலம், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டுவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டங்கள் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகளை யோகாசன நிபுணர் சந்தியா கதிர் தொகுத்து வழங்கினார். நிறைவாக, திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்புரத்தினம் நன்றி கூறினார்.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சியளர்கள் கலந்து கொண்டனர்.
----
திருப்பூரில் 'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு சார்பில் நடந்த மாநில அளவிலான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமில், 'ஹார்ட்புல்னெஸ்' திருப்பூர் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் சோமக்குமார் பேசினார்.