/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பஸ் ஸ்டாண்டில் மினி பஸ்கள் தாறுமாறு'
/
'பஸ் ஸ்டாண்டில் மினி பஸ்கள் தாறுமாறு'
ADDED : ஆக 06, 2024 06:37 AM

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், மினி பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் திறந்த போது, கிழபுறம் உள்ள வளாகத்தில் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. பிறகு, அனைத்து இடங்களிலும், தாறுமாறாக நிறுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிப்பதுடன், அரசு டவுன் பஸ்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்கள், நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டு மனு அளித்தனர்.
டிரைவர்கள் கூறுகையில், ''மினி பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன; இதுகுறித்து கேட்டால், 'போக்குவரத்து அதிகாரிகளே கேட்பதில்லை; நீங்கள் என்ன கேட்கிறீர்கள்' என்று, எங்களை தாக்க வருகின்றனர். மினி பஸ்கள், அந்தந்த 'ரூட்'களில் இயக்கப்படுவதில்லை.
டவுன் பஸ்களின் வருவாய் பாதிக்கும் வகையில், அனுமதியில்லா ரூட்களில் மினி பஸ்களை இயக்குகின்றனர். ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருப்பது போல், மினி பஸ்களுக்கு தனி வளாகம் ஒதுக்க வேண்டும்; அரசு பஸ்களும், அந்தந்த 'ரேக்'குகளில் நின்றுசெல்வதை கட்டாயமாக்க வேண்டும். சட்டவிரோதமாக மினி பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றனர்.