/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேமிப்பு கணக்கில் பணம் பிடித்தம்; வங்கியில் வாடிக்கையாளர் முற்றுகை
/
சேமிப்பு கணக்கில் பணம் பிடித்தம்; வங்கியில் வாடிக்கையாளர் முற்றுகை
சேமிப்பு கணக்கில் பணம் பிடித்தம்; வங்கியில் வாடிக்கையாளர் முற்றுகை
சேமிப்பு கணக்கில் பணம் பிடித்தம்; வங்கியில் வாடிக்கையாளர் முற்றுகை
ADDED : மார் 06, 2025 06:30 AM

திருப்பூர்; திருப்பூரில் ஏராளமான வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் பிடித்தது தொடர்பாக, பொதுமக்கள் எஸ்.பி.ஐ., வங்கியை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் புதுார் பிரிவு அருகே எஸ்.பி.ஐ., வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளரின் சிலரின் கணக்கில் இருந்து, 10 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் பணம் பிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியில் விளக்கம் கேட்டு நேற்று காலை திரண்டனர்.
ஆனால், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்கு முறையாக பதில் அளிக்காத காரணத்தால் வாக்குவாதம் செய்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக வங்கி மேலாளர் பேச்சு நடத்தினர். அதில், 'தவறாக பணம் எடுக்க வாய்ப்பில்லை. ஏதேனும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கும். கொரோனா காலகட்டத்தில் பல்வேறுநிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் தொகையை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்ட காலத்தில், 'செக் பவுன்ஸ்' உள்ளிட்டவைகளுக்கான தொகை தற்போது எடுக்கப்பட்டு இருக்கலாம்.
ஒவ்வொருவரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு விபரம் தெரியப்படுத்தப்படும். தவறுதலாக பணம் எடுக்கப்பட்டிருந்தால், அவற்றை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று தெரிவித்தார்.
இதுதவிர, இ.எம்.ஐ., கட்ட வேண்டியிருப்பதால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வங்கியில் திடீர் என பணம் எடுத்ததால், அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வங்கியை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.