/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 07, 2024 11:58 PM

திருப்பூர்:திருப்பூர், பி.என்.ரோடு முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவி, கோபிகா, 579 மதிப்பெண் பெற்று முதலிடம், கிருத்திகா மற்றும் ரிஹானா கவுசி ஆகியோர் தலா, 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஈஸ்வர், 576 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பெற்றார்.
இவர்கள், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 5 பேர், பொருளியலில், 4 பேர், வணிகவியல் பாடத்தில், 3 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் பசுபதி, பள்ளி முதல்வர் சசிகலா ஆகியோர் இனிப்பு வழங்கி, பாராட்டினர். 'பிளஸ் 1 அட்மிஷன் நடைபெறுகிறது' என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 89039- 93399, 92452 - 74466 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

