/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பாதுகாப்பு நடவடிக்கை மந்தம்?
/
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பாதுகாப்பு நடவடிக்கை மந்தம்?
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பாதுகாப்பு நடவடிக்கை மந்தம்?
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பாதுகாப்பு நடவடிக்கை மந்தம்?
ADDED : மே 27, 2024 01:06 AM

பல்லடம்;பல்லடம் - - வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு, ரோட்டில் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தோண்டப்பட்ட பள்ளங்கள் சில இடங்களில் மூடப்பட்டு ரோடுகள் போடப்பட்டுள்ளன. இடையிடையே, பள்ளங்கள் சரிவர மூடப்படாமலும், பாலம் கட்டுமான பணிக்காகவும் இடைவெளி விடப்பட்டுள்ளன. இது போன்ற இடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இரவு நேரங்களில், பள்ளங்கள் இருப்பது தெரிவதில்லை.
ஆழமாக உள்ள பள்ளங்கள் அருகே சாதாரண குச்சியுடன் கூடிய தடுப்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. எதிரே வரும் வாகனங்களின் விளக்கு ஒளி காரணமாகவும், பள்ளங்கள் இருப்பது தெரியாமலும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இது மிகப்பெரும் விபத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. எனவே, விரிவாக்க பணி நிறைவடையும் வரை, பள்ளங்கள் உள்ள இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.

