/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு
/
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு
ADDED : ஆக 11, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், இமைகள் கண்தான அறக்கட்டளை இணைந்து, செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
ரோட்டரி தலைவர் மூவேந்தன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், பொருளாளர் லோக சதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார். தாய்ப்பால் சிறப்புகள் குறித்து மருத்துவர் ஹேமலதா, பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் பேசினர். அறக்கட்டளை, விவேகானந்தர் சேவா சங்கம் சார்பில், 322வது வாரமாக கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும் என, அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜ் தெரிவித்தார்.