ADDED : ஆக 20, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு முல்லை நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 42. நேற்று காலை திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றார்.
பொங்கலுார் மின் வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, கேரளாவில் இருந்து காங்கயம் நோக்கி மரப்பலகை ஏற்றிச் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த சதீஷ் பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த லாரி டிரைவர் அஜய்,29 பலத்த காயத்துடன் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

