ADDED : ஜூலை 20, 2026 07:45 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களின் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆதார் மையங்கள் மற்றும் 17 இ–-சேவை மையங்கள் நேற்று செயல்படவில்லை.
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆதார் பதிவு ஆபரேட்டர்களின் ஐ.டி. முடக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஆபரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தைத் தவிர மற்ற 8 ஆதார் மையங்களும், மாவட்டம் முழுவதும் உள்ள 17 இ-–சேவை மையங்களும் மூடப்பட்டிருந்தன. ஆதார் பதிவு, திருத்தம் மற்றும் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
