/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் புறவழிச்சாலை அமைச்சர் 'அட்வைஸ்'
/
பல்லடம் புறவழிச்சாலை அமைச்சர் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 06, 2024 11:54 PM
திருப்பூர்:பல்லடம் புறவழிச்சாலை பணிகளை விரைந்து துவக்க வேண்டுமென, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, சப் கலெக்டர் சவுமியா, ஆர்.டி.ஓ.,கள் செந்தில் அரசன், கண்ணன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாமிநாதன், மாவட்டத்தில் நடந்து வரும், பல்வேறு அரசுத்துறை வாரியான வளர்ச்சி பணி விவரங்களை ஆய்வு செய்தார்.
குறிப்பாக, பல்லடம் புறவழிச்சாலை திட்டம் குறித்து ஆலோசித்தார். கோவை - திருச்சி நெடுஞ்சாலை ரோட்டில் இருந்து, காளிவேலம்பட்டி முதல் மாணிக்காபுரம், குங்குமம்பாளையம் வழியாக மாதப்பூர் வரை, புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து துவக்க வேண்டுமென, அறிவுறுத்தினார்.