/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைகிறது
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைகிறது
ADDED : மார் 21, 2024 11:12 AM
திருப்பூர்:இம்மாதம், 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.
பொதுத் தேர்வுக்கென, 92 மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டன. மாவட்டத்தில் 26 ஆயிரத்து, 325 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொண்டனர். முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் உட்பட 1,565 பேர் தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர். 5ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் முடிந்த நிலையில், 8 முதல் ஒவ்வொரு குரூப்புக்கான முக்கியத் தேர்வுகள் நடந்து வந்தது.
பொதுத்தேர்வு என்றாலே வினாத்தாள் கடினமாக இருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடம் இருந்த நிலையில், நடப்பாண்டு பெரும்பாலான தேர்வுகள் எளிமையாகவே இருந்தது. அனைத்து பாடத்திலும் ஒரு மதிப்பெண், இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து மதிப்பெண் ஏதேனும் ஒரு பகுதி மட்டும் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்ததே தவிர, ஓட்டுமொத்த வினாத்தாளும் விடையளிக்க முடியாமல், ரொம்ப கஷ்டம் என சொல்லும் நிலையில் இல்லை. இந்நிலையில் இன்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெறுகிறது.

