3.5 சவரன், ரூ.80 ஆயிரம் திருட்டு
தாராபுரம், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் காந்திமதி, 40; சத்துணவு ஊழியர். இரு நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன் கதவு பூட்டிய நிலையில், பின் பக்க கதவு திறந்திருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, பீரோவில் இருந்த, 3.5 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருட்டு வழக்கு: 2 பேர் கைது
காங்கயத்தில் நடந்த திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில், திருட்டு வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன், 38, வீரபாண்டியை சேர்ந்த விக்னேஷ், 28 என, இருவரை கைது செய்தனர்.
வழிப்பறி செய்த இருவர் கைது
குண்டடத்தில் நடந்த வழிப்பறி வழக்குகளில் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 40, பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 23 என, இருவரை கைது செய்தனர். இருவர் மீதும், நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் என, பல்வேறு பகுதியில், 20 திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிந்தது.

