/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு
/
கோட்டை மாரியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு
ADDED : பிப் 26, 2025 11:55 PM

திருப்பூர்: திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது; காலையில், பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து பூவோடு எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தங்கக்கவச அலங்காரத்தில், அருள்பாலித்த மாரியம்மனை, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். காலை துவங்கி, மாலை வரை, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
வேண்டுதல் நிறைவேறியதால், பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள கருப்பராயசாமிக்கு கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூவோடு ஊர்வலத்தை தொடர்ந்து, நேற்று மாலை, கம்பம் எடுக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் உற்சவமும், நாளை அன்னதானமும் நடைபெற உள்ளது.