/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவமதிப்பு தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம்: ஏ.ஐ.டி.யு.சி.,
/
அவமதிப்பு தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம்: ஏ.ஐ.டி.யு.சி.,
அவமதிப்பு தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம்: ஏ.ஐ.டி.யு.சி.,
அவமதிப்பு தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம்: ஏ.ஐ.டி.யு.சி.,
ADDED : ஜூலை 04, 2024 05:19 AM
திருப்பூர் : போலீசாரின் அவமதிப்பு தொடர்ந்தால், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென, ஏ.ஐ.டி.யு.சி., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., மோட்டார் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், இ.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுரேஷ், வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில், மாநில பொதுக்குழுவை, திருப்பூர் மாவட்டத்தில் நடத்துவது; 2024ம் ஆண்டுக்கான உறுப்பினர் பதிவை விரைந்து முடிப்பது; புதிய ஆட்டோ ஸ்டாண்ட் உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
மாநகர பகுதிகளில், போலீசார், சரக்கு வாகன ஆட்டோ டிரைவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர்; பழிவாங்கும் நோக்கில் அபராதம் விதிக்கின்றனர். இதுகுறித்து, கலெக்டரிடமும், எஸ்.பி.,யிடமும் முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதுபோன்ற அவமதிப்பு சம்பவம் தொடரும்பட்சத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.