/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரி பள்ளி முன்பு போராட்டம்
/
கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரி பள்ளி முன்பு போராட்டம்
கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரி பள்ளி முன்பு போராட்டம்
கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரி பள்ளி முன்பு போராட்டம்
ADDED : ஆக 12, 2024 11:21 PM

அனுப்பர்பாளையம்;அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில வழி கொண்ட இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள் இல்லை. மொத்தம் 28 பேர் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
ஆசியர் பற்றாக்குறையால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது.
பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்ககோரி வேலம்பாளையம் கிளை மா.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி நேற்று காலை பெற்றோர்களுடன் மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகர செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமானோர், பள்ளி நுழைவுவாயில் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உதயகுமார், ''போதிய ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
---
கொடிகளை கட் செய்துவிடவும்
----------------
கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ., கட்சியினர் மற்றும் பெற்றோர்.

