/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்ற பொது நல வழக்கு
/
பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்ற பொது நல வழக்கு
பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்ற பொது நல வழக்கு
பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்ற பொது நல வழக்கு
ADDED : பிப் 27, 2025 11:57 PM

திருப்பூர்: பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே ஓவேலி பகுதியில் உருவெடுக்கும் பாண்டியாறு நீரை, முதுமலை மாயாறுக்கு திருப்புவதன் வாயிலாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் கிடைக்கும்; இது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும். 'பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்' என, பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சங்க பொது செயலாளர் வீரப்பன் கூறியதாவது:
பாண்டியாறு நீர், கேரளாவிற்குள் செல்கிறது. தமிழக அரசு சார்பில் கேரள எல்லைக்குள் தடுப்பணை அமைத்து, அதில் நீரை தேக்குவதன் வாயிலாக, 15 டி.எம்.சி., நீர் கிடைக்கும். அந்த நீரில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின்சாரத்தை கேரளாவுக்கு வழங்கிவிட்டு, தண்ணீரை தமிழகத்துக்கும் பெறும் வகையிலானதுதான் 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக கடந்த, 30 ஆண்டாக, தமிழக - கேரள அரசுகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. தீர்வு காணப்படவில்லை. கேரள அரசு, எதற்கும் ஒத்துவராமல் உள்ளது.
எனவே, நம் மாநில பணத்தை கேரளாவில் செலவழித்து, தடுப்பணை அமைப்பதை தவிர்த்து, நம் மாநில எல்லைக்குள், 36 கி.மீ., ஓடும் பாண்டியாறு நீரை, இடைபட்ட, 4, 5 இடங்களில் 'தடுப்பணை' அமைத்து, கான்கிரீட் குழாய் மார்க்கமாக முதுமலை மாயாறுக்கு நீரை திருப்பி விடுவதன் வாயிலாக, பவானி ஆற்றில் ஆண்டுக்கு, 3 முதல், 4 டி.எம்.சி., தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கு மாவட்டங்களில் நீர் வளம் பெருகும். இக்கோரிக்கையை முன்வைத்து, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

