/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுபாட்டில் வீச்சு; பள்ளி மாணவர் காயம்
/
மதுபாட்டில் வீச்சு; பள்ளி மாணவர் காயம்
ADDED : ஜூலை 24, 2024 11:53 PM
திருப்பூர் : போதை வாலிபர் வீசியெறிந்த மதுபாட்டில் தலையில் பட்டு, பள்ளி மாணவருக்கு காயம் ஏற்பட்டது. வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி, சேடர்பாளையத்தை சேர்ந்தவர், சேகர், 39. மொராட்டுபாளையத்தில் படிக்கும் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் வீடு சென்று கொண்டிருந்தார். எதிரே தாறுமாறாக ஒரு வாலிபர் டூவீலர் ஓட்டி வந்தார். 'ஏன் இப்படி வாகனத்தை இயக்குகிறீங்க?' என சேகர்தட்டிக்கேட்டுள்ளார்.
அதனால், கோபமடைந்த அந்த வாலிபர், இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து சேகர் மீது வீசியெறிந்தார். அங்குள்ள சுவற்றில் பட்ட மதுபாட்டில் சிதறி, சேகரின் ஏழு வயது மகன் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில், மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார், காளிபாளையத்தை சேர்ந்த, பிரபுவை, 30 கைது செய்து, விசாரிக்கின்றனர்.

