/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையை இடம் மாத்துங்க; மனு அனுப்பியும் பலனில்லை
/
மதுக்கடையை இடம் மாத்துங்க; மனு அனுப்பியும் பலனில்லை
மதுக்கடையை இடம் மாத்துங்க; மனு அனுப்பியும் பலனில்லை
மதுக்கடையை இடம் மாத்துங்க; மனு அனுப்பியும் பலனில்லை
ADDED : ஆக 06, 2024 10:00 PM
உடுமலை : உடுமலை-கொழுமம் ரோட்டில், குமரலிங்கம் அருகே ரோட்டோரத்தில், டாஸ்மாக் மதுக்கடை எண், 2027 அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து பழநி செல்ல மாற்றுப்பாதையாக கொழுமம் ரோடு உள்ளது.
எனவே, சுற்றுலா வாகனங்களும், சுற்றுப்பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் என, இந்த ரோட்டில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், ரோட்டோரத்தில், செயல்படும் மதுக்கடையால், பல்வேறு பிரச்னைகள் அப்பகுதியில், ஏற்பட்டு வருகிறது.
இந்த மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும் என பல முறை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.