/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விரிவாக்கம் கட்டமைப்பு சர்ச்சை
/
சாலை விரிவாக்கம் கட்டமைப்பு சர்ச்சை
ADDED : பிப் 26, 2025 11:54 PM

திருப்பூர்: மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் வாகனங்கள், கோவை நகருக்குள் நுழையாமல் அவிநாசி, அன்னுார் வழியாக, செல்கின்றன. 'தினமும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், இவ்வழித்தடத்தில் சென்று வருகின்றன' என, நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது.
இச்சாலை, இரு வழிச்சாலையாக மட்டுமே இருப்பதால்,போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அதிகளவில் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரை, 38 கி.மீ., துார சாலையை, 250 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டு, அதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். இதற்காக சாலையோர மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதில், கருவலுார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை கட்டமைப்பு, அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடைகள் நிறைந்த சாலையோரம், கால்வாயை மிக உயரமாக எழுப்பியுள்ளனர்; சாலையின் மறுபுறம் எவ்வித விரிவாக்கப்பணியும் மேற்கொள்ளாமல், சாலை அமைத்துள்ளனர் என்பது கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதங்கம்.

