/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைக்கு தினமும் ரூ.800 வாடகை; பூ மார்க்கெட் வியாபாரிகள் வாட்டம்
/
கடைக்கு தினமும் ரூ.800 வாடகை; பூ மார்க்கெட் வியாபாரிகள் வாட்டம்
கடைக்கு தினமும் ரூ.800 வாடகை; பூ மார்க்கெட் வியாபாரிகள் வாட்டம்
கடைக்கு தினமும் ரூ.800 வாடகை; பூ மார்க்கெட் வியாபாரிகள் வாட்டம்
ADDED : பிப் 22, 2025 07:13 AM

திருப்பூர்; ''பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்துக்கு கட்டணம் நிர்ணயித்த மாநகராட்சி கடைகளுக்கும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்'' என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் கமிஷனரைச் சந்தித்து அளித்த மனு:
எங்கள் சங்கத்தில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள கடை மற்றும் பூ வர்த்தகத்தை நம்பி நான்காயிரம் குடும்பங்கள் உள்ளன. பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் கடந்தாண்டு 2.5 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் கடைகளுக்கு தினசரி வாடகையாக 800 ரூபாய் வசூலிக்கிறார்.
மேலும், டெண்டர் தொகை நடப்பாண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதால் வாடகை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னர் இருந்த மார்க்கெட்டில் தினமும் 20 முதல் 50 ரூபாய் என்ற அளவில் வாடகை செலுத்தினோம்.
கோவை, சேலம் மாநகராட்சிகளில் தற்போது 100 மற்றும் 200 ரூபாய் என்ற அளவில் தான் கடை வாடகை உள்ளது.
அதே போல் இங்குள்ள கடைகளுக்கும் வாடகை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். இங்குள்ள கழிப்பிடத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், கடைகளுக்கும் அது போல் வாடகையை நிர்ணயிக்க வேண்டும். பூ வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கருதி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

